பம்பலப்பிட்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டூப்ளிகேஷன் வீதி, ஜூபிலி புல்லாஸ் சந்திக்கு அருகில் பஸ் ஒன்றும் லொறியும் ஒன்றுடன் ஒன்று மோதியதில் 07 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கொழும்பில் இருந்து கதிர்காமம் நோக்கி பயணித்த தனியார் பஸ் ஒன்றும், தும்முல்லயிலிருந்து வந்த லொறியும் ஒன்றோடு ஒன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தின் போது பஸ்ஸில் சுமார் 15 பயணிகள் இருந்ததாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.
குறித்த விபத்தில் இரண்டு பெண்களும் ஐந்து ஆண்களும் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.