பதுளை போதனா வைத்தியசாலை இலங்கை மின்சார சபைக்கு செலுத்த வேண்டிய மின் கட்டணம் 7 கோடி ரூபாவை அண்மித்துள்ளதாக அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக நேற்று புதன்கிழமை தாதியர் பயிற்சிப் பிரிவு, மருத்துவக் குடியிருப்பு, தாதியர் தங்கும் விடுதி ஆகியவற்றில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
இதுகுறித்து மருத்துவமனை அதிகாரிகளிடம் கேட்டபோது,
மருத்துவமனையின் மின்கட்டணம் ஏறக்குறைய ஏழு கோடி ரூபாய் நிலுவையில் உள்ளது அதனால் பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது, எதிர்காலத்தில் மருத்துவமனை முற்றிலுமாக மின்சாரம் துண்டிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது, எனவும் தெரிவித்துள்ளனர்.
(ராமு தனராஜா)