நாடளாவிய ரீதியில் ஆறு மாகாணங்களில் ஏற்பட்ட வரட்சியினால் 51,641 குடும்பங்களைச் சேர்ந்த ஒரு இலட்சத்து 71 ஆயிரத்து 781 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
சப்ரகமுவ மாகாணத்தில் இரத்தினபுரி மாவட்டத்தில் 4,039 குடும்பங்களைச் சேர்ந்த 14,116 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கிழக்கில், திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை ஆகிய மூன்று மாவட்டங்களிலும் ஏற்பட்டுள்ள வரட்சியினால், 18,951 குடும்பங்களைச் சேர்ந்த 63,136 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வடமேல் மாகாணத்தை பொருத்தவரையில் குருநாகல் மற்றும் புத்தளம் ஆகிய இரண்டு மாவட்டங்களிலும் 3,101 குடும்பங்களைச் சேர்ந்த 10,043 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வடக்கில், யாழ்ப்பாணம், மன்னார், முல்லைத்தீவு மற்றும் வவுனியா ஆகிய நான்கு மாவட்டங்களிலும் 23,568 குடும்பங்களைச் சேர்ந்த 75,165 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஊவா மாகாணத்தில் பதுளை, மொனராகலை ஆகிய இரண்டு மாவட்டங்களிலும் 469 குடும்பங்களைச் சேர்ந்த 1,809 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, தென்மாகாணத்தில் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் மட்டும் 1,513 குடும்பங்களைச் சேர்ந்த 7,512 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.