உள்நாட்டுப் போர் மற்றும் வறுமையால் வாடும் ஆப்பிரிக்க நாடுகளை சேர்ந்த மக்கள் வாழ்வாதாரம் தேடி பல்வேறு நாடுகளுக்கு அகதிகளாக செல்கின்றனர்.
மேற்கு ஆப்பிரிக்க நாடான செனகல் நாட்டைச் சேர்ந்த அகதிகள் சுமார் 63 பேர் ஸ்பெயினின் கேனரி தீவுகள் நோக்கி கப்பலில் புறப்பட்டுள்ளனர்.
இந்த படகு கேப் வெர்டே தீவு அருகே சென்று கொண்டிருந்த போது திடீரென படகு கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது.
இதில் படகில் இருந்த அனைவரும் நீரில் மூழ்கினர். குறித்த தகவலறிந்து மீட்புப் படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அவர்கள் 56 உடல்களை மீட்டுள்ளனர்.
குறித்த விபத்தில் 56 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 7 பேரின் உடல்களை தேடி வருகின்றனர் என ஐ.நா.வின் சர்வதேச அகதிகள் அமைப்பு தெரிவித்துள்ளது.