ஜோர்தானிலிருந்து மேற்குக் கரையூடாக வேறு நாடொன்றுக்கு இலங்கையர்கள் 43 பேரை சட்டவிரோதமாக கடத்தும் முயற்சியை அந்நாட்டுப் பாதுகாப்புப் பிரிவினர் முறியடித்துள்ளதுடன் நான்கு இடைத்தரகர்களை கைதுசெய்துள்ளனர்.
இலங்கையிலிருந்து சுற்றுலா விசாவில் 43 பேரும் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். இவர்களை அழைத்துச் சென்றதாக சந்தேகிக் கப்படும் மூன்று ஜோர்தானியர்களும் பாலஸ்தீனர் ஒருவரும் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இந்த இடைத்தரகர்கள் இலங்கைப் பிரஜைகளை விடுதியொன்றில் தங்கவைத்துள்ளனர். அவர்கள் திடீரென மாயமானதையடுத்து விடுதி உரிமையாளரால் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் உடனடி விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார் ஆட்கடத்தல் முயற்சியை முறியடித்துள்ளனர்.
இது தொடர்பில் தீவிர விசாரணைகளை ஜோர்தான் பொலிஸார் புலனாய்வுப் பிரிவினருடன் இணைந்து முன்னெடுத்து வருகின்றனர்.