Our Feeds


Thursday, August 17, 2023

ShortNews Admin

மனித உடலின் உள் உறுப்புகள் 423 ஐ 4 நிமிடத்தில் கூறி சோழன் உலக சாதனை படைத்த 8 வயது இலங்கை மாணவி



மனித உடலின் உள் உறுப்புகள் 423 இன் பெயர்களை 4 நிமிடங்களில் கூறி சோழன் உலக சாதனை படைத்த உலகின் அதிக ஞாபகத் திறன் கொண்ட சிறுவன் என்ற சாதனையை பொகவந்தலாவை பாடசாலை மாணவி 8 வயது கனிஷிகா பெற்றுள்ளார்.


பொகவந்தலாவையைச் சேர்ந்த சங்கரதாஸ் மற்றும் பாமினி தம்பதிகளின் மகள் கனிஷிகா பொகவந்தலாவை ஹோலி ரோசரி மகா வித்தியாலயத்தில் 2 ஆம் ஆண்டில் கல்வி கற்று வருகிறார்.

தெய்வத்தான் ஆகாதெனினும் முயற்சி தன் மெய் வருத்தக் கூலி தரும் என்ற வள்ளுவரின் வாக்கிற்கு இணங்க தன் தொடர் முயற்சியினால் மனித உடலின் 423 உள் உறுப்புகளை படத்தில் அடையாளம் காட்டியவாறு 4 நிமிடங்களில் மனப் பாடமாக ஒப்புவித்து சோழன் உலக சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்தார்.

இதன் மூலம் உலகின் அதிக ஞாபகத் திறன் கொண்ட குழந்தைகளின் வரிசையிலும் இடம் பிடித்தார் கனிஷிகா.

இதற்கான உலக சாதனை நிகழ்வு இன்று (16) பொகவந்தலாவையில் அமைந்துள்ள ஹேலிரோசரி மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது.

இந்த சோழன் உலக சாதனை முயற்சியை நடுவராக நேரில் கண்காணித்து உறுதி செய்தார் அந்த நிறுவனத்தின் இலங்கைக் கிளையின் துணைத் தலைவர் ஸ்ரீநாகவானி ராஜா, சோழன் உலக சாதனை நிறுவனத்தின் பதக்கமும் சான்றுதலும் வழங்கி வைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் சோலன் உலக சாதனை புத்தக நிறுவனத்தின் உப தலைவர் ஸ்ரீநாகவானி ராஜா, வித்தியாலத்தின் அதிபர் பி. குமரேசன், உப அதிபர் கிருபாகரன், பொகவந்தலாவ செலான் வங்கியின் முகாமையாளர் கேயார் லங்கா நிறுவனத்தின் இனைப்பாளர் இளையராஜா மற்றும் ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டதுடன் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றது.


-மலையக நிருபர் சதீஸ்குமார்

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »