மினுவாங்கொடை, பொரலுவத்தை பகுதியில் உள்ள மெஹனி மடாலயத்தில் இருந்து காணாமல் போன மூன்று சிறிய பிக்குகளை நுவரெலியா பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
கடந்த 24ஆம் திகதி முதல் குறித்த மடத்தில் தங்கியிருந்த 32 வயதுடைய பெண் ஒருவருடன் 12, 15 மற்றும் 18 வயதுடைய இந்த மூன்று பிக்குகளும் காணாமல் போயுள்ளதாக மினுவாங்கொடை பொலிஸாருக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்திருந்த நிலையில் சந்தேகத்திற்குரிய பெண் நேற்று (26) குறித்த பிக்குகளை நுவரெலியாவிலுள்ள அவரது உறவினர் வீட்டிற்கு அழைத்துச் சென்ற போது, மூன்று பிக்குகளும் பெண்ணும் நுவரெலியா பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
விசாரணையில், மடத்தில் இருந்தவருடன் ஏற்பட்ட பிரச்சினையால், பெண்ணுடன் வந்ததாக குறித்த 3 பிக்குகளும் தெரிவித்துள்ளனர். சந்தேகத்திற்குரிய பெண் மற்றும் பிக்குகள் மேலதிக விசாரணைகளுக்காக மினுவாங்கொடை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.