Our Feeds


Thursday, August 24, 2023

SHAHNI RAMEES

சந்திரயான்- 3 வெற்றி : வாழ்த்து தெரிவித்த அமெரிக்க துணை ஜனாதிபதி...!

 

நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோவால் அனுப்பப்பட்ட சந்திரயான் 3 விண்கலம் 41 நாட்கள் பயணம் செய்து இலக்கை அடைந்து விட்டது. 



இஸ்ரோ விஞ்ஞானிகளின் அயராத பணிகள் உலக நாடுகளின் பாராட்டுகளை பெற்றுள்ளன.



நிலவின் தென் துருவப் பகுதியில் வரலாற்றுச் சிறப்புமிக்க சந்திரயான் 3 விண்கலம் தரையிறங்கியதற்கு அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார். 



இது தொடர்பாக கமலா ஹாரிஸ், தனது சமூக வலைதள பதிவில், 'சம்பந்தப்பட்ட அனைத்து விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்களுக்கு இது ஒரு நம்பமுடியாத சாதனையாகும். விண்வெளி ஆய்வில் உங்களுடன் பங்குதாரர்களாக இருப்பதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம்' என பதிவிட்டுள்ளார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »