உடவலவ நீர்த்தேக்கத்தின் நீர் கொள்ளளவு 3 நாட்களுக்கு மாத்திரமே போதுமானதென இலங்கை மகாவலி அதிகார சபை தெரிவித்துள்ளது.
தற்போது சுமார் 5000 ஏக்கர் அடி நீர் கொள்ளளவு மாத்திரமே காணப்படுவதாக அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.
சமனல வாவியிலிருந்து உடவலவ நீர்த்தேக்கத்திற்கு 12ஆம் திகதி 2300 ஏக்கர் அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.
தெற்கு கால்வாய் ஊடாக இன்று(14) அங்குனுகொலபெலஸ்ஸவிற்கு நீர் திறந்துவிடப்படும் என இலங்கை மகாவலி அதிகார சபை தெரிவித்துள்ளது.