Our Feeds


Thursday, August 3, 2023

Anonymous

விடுதலை புலிகளின் காத்தான்குடி படுகொலை: தொழுகையிலிருந்த முஸ்லிம்கள் கொல்லப்பட்ட 33வது சுஹதாக்கள் தினம் இன்று

 



காத்தான்குடியில் பள்ளிவாசல்களில் தொழுது கொண்டிருந்த நூற்றுக்கணக்கான முஸ்லிம்களை, பாசிச விடுதலைப் புலிகள் இயத்தினர் – படுகொலை செய்த நாளின் 33ஆவது நினைவு தினம் இன்றாகும்.


மறக்கவே முடியாத அந்த நாளை – ‘சுஹதாக்கள் தினம்’ எனும் பெயரில் முஸ்லிம்கள் நினைவுகொள்கின்றனர்.


1990ஆம் ஆண்டு காத்தான்குடியிலுள்ள ஹுசைனியா பள்ளிவாசலிலும், மீரா ஜும்ஆ பெரிய பள்ளிவாசலிலும் – இஷா தொழுகையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவர்கள் மீது, பாசிசப் புலிகள் கைக்குண்டுகளை வீசியும், துப்பாக்கிகளாலும் சுட்டு தாக்குதல் நடத்தினர்.


இதன்போது சம்பவ இடத்தில் 103 பேர் பலியாாகினர். காயமடைந்தவர்களில் 21 பேர் பின்னர் மரணித்தனர்.


தமது போராட்டத்தில் முஸ்லிம்களையும் இணைத்துக் கொண்டு, ‘தமிழ் பேசும் மக்களுக்கானது’ தமது போராட்டம் எனக் கூறி வந்த – பாசிச விடுதலைப் புலிகள் அமைப்பினர், பின்னர் முஸ்லிம்களை தொடர்ச்சியாக படுகொலை செய்து வந்ததோடு, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில், முஸ்லிம்களை – அவர்களின் வாழ்விடங்களில் இருந்தும் துப்பாக்கி முனையில் வெளியேற்றினர்.


புலிகள் மேற்கொண்ட இந்த அட்டூழியங்கள் தொடர்பில் முஸ்லிம்களுக்கு இதுவரையில் நீதி கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


பாசிசப் புலிகள் புரிந்த இந்த கொடூரங்களுக்காக, காலம் அவர்களைத் தண்டித்த போதிலும், புலிகள் இயத்தவர்களால் பாதிப்பக்குள்ளான முஸ்லிம்களுக்கும், அவர்களின் குடும்பத்தினருக்கும் நீதி வழங்கப்பட்டே ஆக வேண்டும்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »