மதுபோதையில் கலவரத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் நபர் ஒருவரைத் தாக்கியதாகக் கூறப்படும் கொழும்பு வாழைத்தோட்டம் பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த மூன்று பொலிஸ் கான்ஸ்டபிள்கள் நேற்று (01) கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகத்துக்குரிய மூன்று பொலிஸ் கான்ஸ்டபிள்களையும் கொழும்பு சட்ட வைத்திய அதிகாரியிடம் முன்னிலைப்படுத்தியதையடுத்து, சட்ட வைத்தியர் அவர்களை பரிசோதித்து அவர்கள் மதுபோதையில் இருந்ததாக மருத்துவ அறிக்கைகளை சமர்ப்பித்ததாக பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
வாழைத்தோட்டம் விஹாரை ஒன்றுக்கு அருகில் வீதித் தடைக் கடமையில் ஈடுபட்டிருந்த வாழைத்தோட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் குழுவொன்றே இந்த தாக்குதலை மேற்கொண்டதாக விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
இதனையடுத்தே மூன்று பொலிஸார் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டனர்.