Our Feeds


Saturday, August 19, 2023

ShortNews Admin

2 மாணவர்களின் ஜனாசாக்களும் பெருந்திரளான மக்களின் கண்ணீருக்கு மத்தியில் அடக்கம்



வவுனியாவில் வலய மட்ட விளையாட்டுப் போட்டியின் போது நீரில் முழ்கி மரணமடைந்த இரு மாணவர்களின் ஜனாசாக்களும் பெருந்திரளான மக்களின் கண்ணீருக்கு மத்தியில் நேற்று (18) அடக்கம் செய்யப்பட்டது.


வவுனியா வலயமட்ட விளையாட்டுப் போட்டியானது பம்பைமடுவில் அமைந்துள்ள வவுனியா பல்கலைக் கழக மைதானத்தில் நேற்று நடைபெற்ற போது மைதானத்தின் அருகில் இருந்த நீர் குழியில் விழுந்த வ்வுனியா முஸ்லிம் மகா வித்தியாலத்தைச் சேர்ந்த 15 மற்றும் 14 வயதுடைய இரு மாணவர்கள் மரணமடைந்திருந்தனர்.

குறித்த இரு மாணவர்களின் ஜனசா பட்டாணிச்சூர் பள்ளியில் அஞ்சலிக்காக வைகப்பட்டு பட்டாணிச்சூர் மையவாடியில் அடக்கம் செய்யப்பட்டது.

இதன்போது, முன்னாள் அமைச்சரும் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவருமான ரிசாட் பதியுத்தீன், வலயக் கல்வி திணைக்களத்தினர், அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட நூற்றுக்கணக்கான மக்கள் பங்கேற்பு பொதுமக்கள் பெருந்திரளானோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தியிருந்துடன், பலரதும் கண்ணீருக்கு மத்தியில் இருவரது சடலங்களும் நல்லடக்கம் செய்யப்பட்டது.



-வவுனியா தீபன்

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »