மலையகத்திற்கு மேலும் 2500 ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்படவுள்ளது.
இதனை இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ராமேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
மலையகத்திற்காக 3000 ஆசிரியர் நியமனங்களை கோரியதாகவும் அதற்கு ஜனாதிபதி மற்றும் கல்வி அமைச்சர் ஆகியோர் சாதகமான பதில்களை வழங்கியுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.