சீனாவில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் பல நகரங்கள் வெள்ளத்தில் முழ்கியுள்ளன.
சாலைகள், பாலங்கள், வீடுகள் சேதம் அடைந்துள்ளன. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கி இருக்கிறது.
வெள்ளத்தில் சிக்கிய ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் ஜியாங் மாவட்டம் ஹாஸ் என்ற பகுதியில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் சிக்கி 22 பேர் உயிரிழந்துள்ளனர்.