Our Feeds


Monday, August 7, 2023

Anonymous

ஹக்கீம் தலைமையில் மு.க உயர்பீடம் கூடியது. 20 ஐ ஆதரித்த 3 MP க்களும் வருகை.

 



முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீடம் நேற்று காலை கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் தலைமையில்  கூடியது. நீண்ட காலத்திற்கு பின்னர் தௌபீக், ஹரீஸ் மற்றும் பைசால் காசீம் எம்பீக்களும் நேற்றைய உயர்பீடக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.


13 தொடர்பில் - இங்கு விரிவாக கலந்துரையாடப்பட்டது. இது குறித்து எவ்வாறான திருத்தங்களை முஸ்லிம்கள் சார்பில் முன்மொழிய வேண்டும்; முஸ்லிம் காங்கிரஸின் நிலைப்பாடு என்ன? என்பது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.


ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டால் யாரை ஆதரிப்பது என்பது குறித்து பலரும் பல்வேறு கருத்துக்களை முன்வைத்தனர். 


ரணிலை அல்லது சஜித்தை ஆதரிப்பது என்று எந்தவொரு தீர்க்கமான முடிவும் எட்டப்படாத நிலையில் - வெற்றி வாய்ப்புள்ள வேட்பாளரை ஆதரிப்பது என்று இறுதி தீர்மானம் எட்டப்பட்டது.


கல்முனை பிரதேச செயலக விவகாரம் மற்றும் சாய்ந்தமருதுக்கான தனியான நகர சபை விவகாரம் குறித்தும் பேசப்பட்டது.


சாய்ந்தமருதுக்கான நகர சபை விடயத்தை இன்னுமின்னும் இழுத்தடிக்காமல் - அதனை விரைவாக நிறைவேற்றுவது சிறந்தது என கல்முனை பிரதேசத்தைச் சேர்ந்த ஓரிருவர் வலியுறுத்தினர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »