தமீழீழ விடுதலைப் புலிகளினால் 1990 ஆண்டு ஓகஸ்ட் மாதம் 12 ம் திகதி படுகொலை செய்யப்பட்ட 121 முஸ்லிம் பொதுமக்களை நினைவுகூரும் 33வது சுஹதாக்கள் தினம் இன்று ஏறாவூரில் அனுஷ்டிக்கப்பட்டது.
சுஹதக்கள் நினைவு தினத்தையொட்டி பொதுச்சந்தை, வர்த்தக நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டு வெள்ளைக்கொடி எங்கும் பறக்கவிடப்பட்டன.
பேரணி நடைபெற்று – அதன் முடிவில் ஏறாவூர் பிரதேச செயலாளர் நிஹாரா மௌஜூத்திடம் சுஹதாக்கள் நினைவுப் பேரவையினால் மஹஜர் ஒன்று நகர சபை வளாகத்தில் வைத்து கையளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் அரசியல் பிரமுகர்கள், உலமாக்கள், கல்விமான்கள், ஊர்பிரமுகர்கள், மத்ரஸா மாணவர்கள் என பெருந்திரளான பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
1990ஆம் ஆண்டு ஓகஸ்ட் 12ஆம் திகதியன்று இரவுப் பொழுதில் ஏறாவூரில் குழந்தைகள், பெண்கள், ஆண்கள், முதியோர் என்கிற பாகுபாடுகளின்றி, பாசிசப் புலிகள் இயக்கத்தவர்களால் – முஸ்லிம்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 121 பேர் கொல்லப்பட்டனர்.