Our Feeds


Wednesday, August 30, 2023

SHAHNI RAMEES

தாய்வான் எல்லையில் அத்துமீறி நுழைந்த 11 சீன போர் விமானங்கள்

 

சீனாவில் உள்நாட்டு போர் நடந்த பின்னர் தனிநாடாக தாய்வான் உருவானபோதிலும், தங்களுடைய நாட்டின் ஒருங்கிணைந்த பகுதி தாய்வான் என சீனா தொடர்ந்து தெரிவித்து வருகின்றது.



தாய்வானின் வான் எல்லைக்குள் அவ்வப்போது சீன போர் விமானங்கள் அத்துமீறி நுழைந்து மிரட்டல் விடுத்தும் வருகிறது. தீவு நாடான தாய்வானுக்கு அமெரிக்கா போன்ற நாடுகள் ஆதரவு தெரிவித்து வருகின்றன. இதனால் சீனா அமெரிக்காவுக்கு எச்சரிக்கையும் விடுத்தது.



தொடர்ந்து தாய்வான் பகுதியில், தனது பலம் தெரியும் வகையில் இராணுவ பயிற்சியிலும் ஈடுபட்டது. எனினும், தாய்வானுக்கு அவ்வப்போது அமெரிக்கா ஆயுத உதவிகளை வழங்கி வருகிறது.



இந்நிலையில், தாய்வானை சுற்றிலும் கடந்த திங்கட்கிழமை காலை 6 மணியில் இருந்து, செவ்வாய் கிழமை காலை 6 மணி வரையிலான இடைப்பட்ட நேரத்தில் சீனாவின் 11 போர் விமானங்கள் மற்றும் 10 கடற்படை கப்பல்கள் தாய்வானுக்குள் அத்துமீறி நுழைந்துள்ளன.



இதனை தாய்வான் நாட்டின் தேசிய பாதுகாப்பு அமைச்சு கண்டறிந்தது. இவற்றில், ஹார்பின் பி.இசட்.கே.-005 ஆளில்லா விமானம் ஒன்று தாய்வான் ஜலசந்தியின் இடைக்கோட்டு பகுதியை மீறி உள்ளே நுழைந்துள்ளது. 



இது தாய்வானின் வான் பாதுகாப்பு அடையாள மண்டலத்தின் வடகிழக்கு பிரிவிற்குள் அத்துமீறி சென்றுள்ளது. 


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »