Our Feeds


Saturday, August 5, 2023

News Editor

119க்கு அழைக்கும் மக்களுக்கு எச்சரிக்கை


 119 பொலிஸ் அவசர பிரிவுக்கு தவறான தகவல்களை வழங்கும் நபர்கள் தொடர்பில் சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படும் என பொலிஸார் தெரிவித்தனர்.

இதுபோன்ற குற்றத்தில் ஈடுபடும் நபருக்கு 6 மாதங்கள் வரை சிறைத்தண்டனை, அபராதம் அல்லது இரண்டு தண்டனைகளையும் சேர்த்து வழங்க சட்ட விதிகள் உள்ளதாகவும் பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் அவசர பிரிவுக்கு நாள் ஒன்றுக்கு 3,000 - 3,500 அழைப்புகள் வருவதாக காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளாந்தம் வரும் செய்திகளை ஆய்வு செய்யும் போது, ​​பொதுமக்கள் 119 என்ற தொலைபேசி இலக்கத்தை பயன்படுத்தி தவறான தகவல்கள் அடங்கிய செய்திகளை அனுப்புவது அவதானிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக மிகவும் முக்கியமான மற்றும் அவசரமாக செயற்படுத்தப்பட வேண்டிய தொலைபேசி செய்திகளை செயலாக்குவதில் தாமதம் ஏற்படக்கூடும் என பொலிஸார் சுட்டிக்காட்டுகின்றனர். 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »