வெள்ளவத்தையில் நேற்று இடம்பெற்ற கால்பந்து போட்டியின் போது ஏற்பட்ட மோதலில் 10 பேர் காயமடைந்துள்ளனர். இரு பாடசாலைகளுக்கிடையிலான கால்பந்து போட்டியின் போதே இந்த மோதல் ஏற்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பில் 5 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவத்தில் காயமடைந்தவர்கள் சிகிச்சைகளுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.