கடந்த 06 மாதங்களில் ஹம்பாந்தோட்டை பொது வைத்தியசாலையின் வைத்திய நிபுணர்கள் 10 பேர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக அகில இலங்கை மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் வைத்தே அந்த சங்கம் இதனை அறிவித்துள்ளது.
அத்துடன் கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையின் மயக்க மருந்து நிபுணர் ஒருவரும் ஓய்வு பெற்று நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.
அந்த வைத்தியரின் வெற்றிடத்தை நிரப்புவதற்கு சுகாதார அமைச்சு தவறியுள்ளதாகவும் தொழிற்சங்கம் குறிப்பிட்டுள்ளது.
இதனால் சத்திரச் சிகிச்சைக்கு செல்லும் நோயாளர்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாகவும், அவர்களை வேறு வைத்தியசாலைகளுக்கு கொண்டு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த பிரச்சினைகள் தீர்க்கப்படாவிட்டால், எதிர்காலத்தில் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்க வேண்டியிருக்கும் என அகில இலங்கை மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஜயந்த பண்டார எச்சரித்துள்ளார்.