நோட்டன் பிரதான வீதியில் இன்று மாலை 5.30 மணியளவில் முச்சக்கர வண்டி வீதியை விட்டு விலகி 100 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதில் நான்கு பேர் படுகாயமடைந்த நிலையில் கிளங்கன் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக கண்டி போதான வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக கிளங்கன் ஆதார வைத்தியசாலையின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து மஸ்கெலியா பொலிஸ் நிலைய போக்குவரத்து அதிகாரி தெரிவிக்கையில், முச்சக்கரவண்டியில் பயணித்த நான்கு இளைஞர்களும் பொகவந்தலாவ பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் இவர்கள் அனைவரும் நோட்டன் பகுதியில் உள்ள முருத்ததென்ன தோட்டத்தில் மரண வீட்டிற்கு சென்று கொண்டிருந்த போது முச்சக்கரவண்டி வீதியை விட்டு விலகி 100 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதாகவும் இவர்கள் அனைவரும் மது போதையில் இருந்தனர் என கூறியுள்ளார்.