இலங்கையில் இந்நாட்களில் கண்கவர் விண்கல் மழையை காண முடியும் என வானியலாளர் கிஹான் வீரசேகர தெரிவித்துள்ளார்.
நேற்று (12) முதல் அதிகாலை வேளையில் இந்த விண்கல் மழையை காண முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது பெர்சீட்ஸ் (Perseids) விண்கல் மழை என அழைக்கப்படுவதாக கிஹான் வீரசேகர குறிப்பிடுகின்றார்.
இந்த விண்கற்களை அதிகாலை 01 மணி முதல் காண முடியும் என சுட்டிக்காட்டியுள்ள அவர், அடிவானத்தில் இருந்து எழும் விண்கற்கள் மெதுவாக மேல் வானத்தை நோக்கி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.