Our Feeds


Wednesday, August 23, 2023

SHAHNI RAMEES

09 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை...!

 

ஒரு முறை மாத்திரம் பயன்படுத்தப்படும் 09 வகையான பிளாஸ்டிக் பொருட்களை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதாம் திகதி முதல் அமுலாகும் வகையில், உற்பத்தி மற்றும் விற்பனை செய்யவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுற்றடால் அதிகாரசபை அறிவித்துள்ளது. 



இதனுடன் தொடர்புடைய வர்த்தமானி அறிவித்தல் சுற்றாடல் அமைச்சர் நஸீர் அஹமட்டினால் வெளியிடப்பட்டுள்ளதாக அந்த அதிகாரசபை தெரிவித்துள்ளது. 



ஒருமுறை மாத்திரம் பயன்படுத்தப்படும் குடிபான பிளாஸ்டிக் குழாய், பிளாஸ்டிக் தட்டு, கோப்பை, கரண்டி, கத்தி, பிளாஸ்டிக் பூக்கள் மற்றும் பிளாஸ்டிக் இடியப்ப தட்டுகள் ஆகிய பொருட்களுக்கு ஒக்டோபா் முதலாம் திகதியிலிருந்து அமுலாகும் வகையில் தடைவிதிக்கப்பட்டுள்ளது. 



அதற்கமைய, இந்த பொருட்களை நாட்டில் உற்பத்தி செய்தல், தேசிய பாவனைக்காக இறக்குமதி செய்தல், விற்பனை செய்தல், இலவசமாக பகிர்தல் அல்லது காட்சிப்படுத்துதல் ஆகிய செற்பாடுகள் தடைசெய்யப்பட்டுள்ளதுடன், இதை மீறுபவர்களுக்கு எதிராக தேசிய சுற்றாடல் சட்டத்தின் ஒழுங்கு விதிகளுக்கமைய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மத்திய சுற்றாடல் அதிகாரசபை எச்சரிக்கை விடுத்துள்ளது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »