இலங்கை விமான படைக்கு, 95 கோடி ரூபா நிதி செலவில் கொள்வனவு செய்யப்பட்ட 06 உயர்தர பயிற்சி விமானங்களில் 05 விமானங்கள் இயந்திர பழுதுபார்ப்பு நடவடிக்கைகளின் காரணமாக இரு வருடங்களுக்கு மேலாக பயிற்சி செயற்பாடுகளுக்கு பயன்படுத்தாமல் இருப்பதாக தேசிய கணக்காய்வு அலுவலகத்தின் அறிக்கையில் குறிப்பிடபட்டுள்ளது.
அந்த விமானங்களுக்காக செலவு செய்த நிதி பயனில்லாமல் போயுள்ளதாக குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த 06 பயிற்சி விமானங்களில் ஒன்று 2020 டிசம்பர் 15 ஆம் திகதி விபத்துக்குள்ளாகி அழிவடைந்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கையின் தகவல்களுக்கமைய, இந்த 06 விமானங்களும் 2018 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 17 ஆம் திகதி கொள்வனவு செய்யப்பட்டுள்ளன.
விமான படையின் 2022 ஆம் ஆண்டுக்கான வருடாந்த அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள கணக்காய்வு அறிக்கையிலேயே இந்த விடயங்கள் குறிப்பிடபட்டுள்ளன.