அங்குருவாதொட்ட, உருதுதாவ பிரதேசத்தில் இருந்து காணாமல் போன இளம் தாய் மற்றும் அவரது சிறிய மகளின் சடலங்கள் அங்குருவாதொட்ட இரத்மல்கொட காட்டில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
24 வயதான வாசனா குமாரி மற்றும் அவரது 11 மாத மகள் தஷ்மி திலன்யா ஆகியேர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு காணாமல் போயுள்ளனர்.
அவரது கணவர் வேலைக்குச் சென்ற நிலையில், வீட்டில் மனைவி மற்றும் குழந்தை இல்லாததால் பொலிஸ் நிலையத்தில். புகார் அளித்துள்ளார்.
இதையடுத்து பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் குறித்த இருவரும் இவ்வாறு சடலங்களாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க :- தாயும், 11 மாத கைக்குழந்தையும் மாயம்
இதையும் படிக்க :- தாயும், 11 மாத கைக்குழந்தையும் மாயம்
அங்குருவத்தோட்ட ஊராடுதாவ பிரதேசத்தில் இளம் தாயும் அவரது 11 மாத கைக்குழந்தையும் காணாமல் போயுள்ளதாக அங்குருவத்தோட்ட பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவரது கணவர் பணி நிமித்தமாக வீட்டை விட்டு வெளியேறி, அன்று மாலை 6.30 மணியளவில் பணி முடிந்து வீடு திரும்பியபோது, மனைவி மற்றும் மகள் இல்லாததால் பதற்றமடைந்த அவர், அக்கம் பக்கத்தினரிடம் இதுபற்றி கூறியுள்ளார்.
இங்கிரிய பிரதேசத்தில் உள்ள மனைவியின் பெற்றோருடன் தொடர்பு கொண்டும் அவர்கள் வரவில்லை என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பில் பொலிஸ் மோப்ப நாய்களைப் பயன்படுத்தி விசாரணை நடத்திய பொலிஸார், காணாமல் போன பெண்ணின் நெருங்கிய உறவினரின் முச்சக்கரவண்டியை தடுத்து நிறுத்தி அவரை விசாரணைக்காக பொலிஸ் காவலில் எடுத்துச் சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.