Our Feeds


Saturday, July 22, 2023

Anonymous

CCTV VIDEO: 24 வயது தாய் & அவரது 11 மாத குழந்தை படுகொலை - பொலிஸ் காவலில் வைக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட உறவினர் மீண்டும் கைது

 



24 வயதுடைய தாயையும் அவரது 11 மாதக் குழந்தையையும் கொடூரமான முறையில் படுகொலை செய்த குற்றச்சாட்டில் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட நபர் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.


இவ்வாறு  கைது செய்யப்பட்ட சந்தேநபர் உயிரிழந்த வாசனா என்ற பெண்ணின் கணவரின்  உறவினர் என தெரிவிக்கப்படுகிறது.

24 வயதான வாசனா குமாரி மற்றும் அவரது 11 மாத குழந்தை கடந்த 18 ஆம் திகதி முதல் காணவில்லை என அவரது கணவர் அங்குருவாத்தோட்ட பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

அதன்படி, விசாரணையை தொடங்கிய பொலிசார், வீட்டின் குளிர்சாதன பெட்டி கதவு மற்றும் தரைப்பகுதிகளில் பல இடங்களில் ரத்தக்கறை படிந்திருப்பதை அவதானித்துள்ளனர்.

இதனிடையே இந்த சம்பவம் தொடர்பாக தனது சகோதரியின் கணவர் மீது சந்தேகம் இருப்பதாக வாசனாவின் கணவர் தெரிவித்துள்ளார்.

அதன்படி முன்னாள் இராணுவ வீரரான அந்த நபர் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டார்.

விசாரணைக்கு பயன்படுத்தப்பட்ட மோப்ப நாயான 'புருனோ' சந்தேக நபரின் முச்சக்கரவண்டிக்கு அருகில் நின்றமையால் பொலிஸாரின் சந்தேகம் மேலும் வலுவடைந்தது.

இதற்கிடையில், வாசனாவும் அவரது குழந்தையும் காணாமல் போய் மூன்று நாட்களுக்குப் பிறகு, வாசனாவின் வீட்டிலிருந்து சுமார் ஐநூறு மீற்றர் தொலைவில் உள்ள காட்டுப் பகுதியில் அவர்களது சடலங்களை பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் கண்டு பிடிக்கப்பட்டன.

அவர்களின் சடலங்கள் ஏற்கனவே விலங்குகளால் சேதப்படுத்தப்பட்டிருந்தன.

இதன்போது, உயிரிழந்த வாசனாவின் கணவர், பொலிசார் மீது குற்றஞ்சாட்டியதுடன், உரிய விசாரணைகளை மேற்கொண்டிருந்தால், தனது மனைவி மற்றும் மகளை காப்பாற்ற வாய்ப்பு இருந்ததாக தெரிவித்தார்.

இதேவேளை, பாணந்துறை ஆதார வைத்தியசாலையின் நிபுணத்துவ சட்ட வைத்தியர் உள்ளிட்ட அதிகாரிகள் குழு நேற்று பிற்பகல் சடலங்கள் இருந்த இடத்தில் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நபர் 20ம் திகதி விடுவிக்கப்பட்ட நிலையில், அவர்  பிரதேசத்தை விட்டுத் தப்பிச் சென்றிருந்தார்.

இதே வேலை சந்தேக நபர் நேற்று தனது மனைவி வீட்டிற்கு வந்துள்ளார்.

அதை அந்த நபரின் மனைவியும் உறுதி செய்துள்ளார்.

வாசனா மற்றும் குழந்தை காணாமல் போன அன்று, அந்த நபர் தனது முச்சக்கர வண்டியில் சந்தேகத்திற்கிடமான ஒன்றை எடுத்துச் செல்வதைக் காட்டும் சிசிடிவி கெமரா புகைப்படமும் வௌியாகியிருந்தது.

இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என உயிரிழந்த பெண்ணின் உறவினர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இந்நிலையில்  வரகாகொட பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் சந்தேகநபர் பதுக்கியிருந்த நிலையில் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »