ஈஸ்டர் தாக்குதலை தொடர்ந்து இலங்கையின் அப்போதைய ஜனாதிபதி கோட்டாவினால் தடை செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்ட அமைப்புகளில் 5 இஸ்லாமிய அமைப்புகளின் தடை நீக்கப்பட்டதாக அரசாங்கம் கெஸட் அறிவிப்பை விடுத்துள்ளது.
ஜனாதிபதி ரனில் விக்கிரமசிங்கவின் கையெழுத்துடன் வெளியிடப்பட்டுள்ள கெஸட் அறிவிப்பின் பிரகாரம்
சிலோன் தவ்ஹீத் ஜமாஅத் - என்கிற CTJ ஐக்கிய தவ்ஹீத் ஜமாஅத் என்கிற UTJ அகில இலங்கை தவ்ஹீத் ஜமாஅத் என்கிற ACTJ ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் என்கிற SLTJ மற்றும் ஜமாஅத் அன்சார் சுன்னதில் முஹம்மதிய்யா என்கிற JASM ஆகிய ஐந்து அமைப்புகளில் தடைகள் நீக்கப்பட்டுள்ளன.