கடந்த மார்ச் 12-ஆம் திகதி அந்தப் பொறுப்பை ஏற்ற குயின் கேங், கடுமையான வெளியுறவுக் கொள்கைகளை வலியுறுத்துபவர் என்று கூறப்படுகிறது.
இதில், அவருக்கும் ஜனாதிபதி ஜின்பிங்குக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.
கடந்த ஒரு மாதமாகவே முக்கிய நிகழ்ச்சிகளில் குயின் கேங் ஓரம் கட்டப்படுவதாக செய்திகள் வெளியாகி வந்த நிலையில், வெளியுறவுத்துறை அமைச்சர் பொறுப்பிலிருந்து அவர் விலக்கப்படுவதாகவும், அவருக்குப் பதிலாக அந்தப் பொறுப்பே ஏற்கெனவே வகித்து வந்த வாங் யீ நியமிக்கப்படுவதாகவும் செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டது.
இருதரப்பு நல்லுறவை மேம்படுத்துவதற்காக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆன்டனி பிளிங்கன் உள்ளிட்டோர் சீனா வந்து சென்றுள்ள நிலையில் குயின் கேங் நீக்கப்பட்டுள்ளது பல்வேறு ஊகங்களை எழுப்பியுள்ளது.