Our Feeds


Monday, July 24, 2023

Anonymous

பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணை விடுமுறை குறித்து கல்வி அமைச்சின் விசேட அறிவித்தல்!

 



(எம்.மனோசித்ரா)


கல்வி அமைச்சினால் இரண்டாம் தவணைக்கான விடுமுறைகள் தொடர்பில் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, ஆகஸ்ட் 18ஆம் திகதி முதல் 27ஆம் திகதி வரை இரண்டாம் தவணையின் முதற்கட்ட விடுமுறை வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

திங்கட்கிழமை (24)  முதல் இவ்வாண்டுக்கான இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இரண்டாம் தவணையின் முற்கட்ட கற்றல் செயற்பாடுகள் ஆகஸ்ட் 17ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளது. 

அதன் பின்னர் விடுமுறையைத் தொடர்ந்து ஆகஸ்ட் 28ஆம் திகதி முதல் ஒக்டோபர் 27ஆம் திகதி வரை இரண்டாம் தவணையின் இரண்டாம் கட்ட கல்வி செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

அதனைத் தொடர்ந்து ஒக்டோபர் 30ஆம் திகதி மூன்றாம் தவணையின் முதலாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டு நவம்பர் 24ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது. நவம்பர் 25ஆம் திகதி முதல் டிசம்பர் 31ஆம் திகதி வரை கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைகளுக்காக விடுமுறை வழங்கப்படவுள்ளது. 

உயர்தர பரீட்சைகள் நிறைவடைந்ததன் பின்னர் 2024 ஜனவரி முதலாம் திகதி முதல் பெப்ரவரி 16ஆம் திகதி வரை இவ்வாண்டுக்கான மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளது.

இதேவேளை, முஸ்லிம் பாடசாலைகளுக்கான விடுமுறை திட்டமும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய முஸ்லிம் பாடசலைகளிலும் மேற்கூறப்பட்ட முறைமைக்கு அமையவே கல்வி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்று கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »