கடந்த வாரம் நடைபெற்ற பொரல்லை கோட்ட கல்வி மட்ட பாடசாலைகளுக்கிடையே ஆங்கில தினப் போட்டியில் அல்ஹிஜ்ரா முஸ்லிம் வித்தியாலய மாணவர்கள் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியை பெற்றுள்ளனர்.
ஆங்கில தினப் போட்டியில் அல்ஹிஜ்ரா முஸ்லிம் வித்தியாலயம் சார்பாக பங்கேற்ற 35 மாணவர்களில் 24 மாணவ, மாணவிகள் முதல் 3 இடங்களைப் பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
இவ்வெற்றிக்கு பங்காற்றிய பாடசாலையின் அதிபர் மற்றும் ஆங்கிலப்பாட ஆசிரியை, மற்றும் மாணவ மாணவிகளுக்கு பழைய மாணவர் சங்கம் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
100 ஆண்டுகள் வரலாற்றைக் கொண்ட இப்பாடசாலை அண்மைக் காலங்களில் இணைப்பாடவிதான செயற்பாடுகளில் மிளிர்கின்றமை பாடசாலையின் வளர்ச்சியை துலாம்பரமாக எடுத்துக் காட்டுகிறது.
கடந்த 2022 ஆம் கல்வியாண்டில் க.பொ.த சாதாரண தர பரீட்சையில் கொழும்பு கல்வி வலைய முஸ்லிம் பாடசாலைகளுக்கிடையே 79% வீத சித்தி பெற்று சாதித்து காட்டியது.
இந்நிலையில் இப்பாடசாலையை இல்லாதொழிக்க ஒருசில அரசியல் வாதிகளும், சமூக தலைவர்களும் தமது சுயலாபத்திற்காக கோடாரிக் காம்புகளாக சதி செய்கின்றனர்.
பொரல்லை கோட்ட மட்டத்தில் காணப்படும் ஒரே ஒரு முஸ்லிம் பாடசாலை இது என்பதும் குறிப்பிடத்தக்கது.
தகவல்,
பழைய மாணவர் சங்கம்
ஊடகப் பிரிவு.