Our Feeds


Sunday, July 23, 2023

Anonymous

கடைசி நேரத்தில் கோல் அடித்து காப்பாற்றிய லயனல் மெஸ்ஸி

 



லீக்ஸ் கிண்ண கால்பந்தாட்ட போட்டி அமெரிக்காவில் நடந்து வருகின்றது. 


இதில் புளோரிடாவில் அதிகாலை இடம்பெற்ற கிரஸ் அசுல் (மெக்சிகோ) அணிக்கு எதிரான லீக் போட்டியில் இன்டர் மியாமி (அமெரிக்கா) அணிக்காக அர்ஜென்டினா கால்பந்தாட்ட அணித்தலைவர் லயோனல் மெஸ்சி முதல்முறையாக களம் இறங்கினார்.


பிற்பாதியில் அடியெடித்து வைத்த மெஸ்சி கடைசி நிமிடத்தில் பிரிகிக் வாய்ப்பில் கோல் அடித்து அணியின் வெற்றிக்கு வழிவகுத்து அசத்தினார். 


இந்த போட்டியில் இன்டர் மியாமி அணி 2-1 என்ற கோல் கணக்கில் கிரஸ் அசுல் அணியை வீழ்த்தியது. 


கடந்த 2 ஆண்டுகளாக பி.எஸ்.ஜி. கிளப் அணிக்காக விளையாடிய மெஸ்சி சமீபத்தில் இன்டர் மியாமி கிளப்பில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »