உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தின் பின்னர் பாதுகாப்பு
அமைச்சினால் தடைவிதிக்கப்பட்டிருந்த ஐந்து முஸ்லிம் அமைப்புகளின் மீதான தடையை நிபந்தனையுடன் நீக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.ஜம்மிய்யத்து அன்சாரிஸ் சுன்னத்தில் முஹம்மதியா, ஶ்ரீலங்கா தௌஹீத் ஜமாஅத், அகில இலங்கை தௌஹீத் ஜமாஅத், லங்கா தவ்ஹீத் ஜமாஅத், ஐக்கிய தௌஹீத் ஜமாஅத் ஆகிய அமைப்புகளின் தடையே இவ்வாறு நீக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதற்கிடையே குறித்த அமைப்புகள் தங்கள் செயற்பாடுகளை வௌிப்படையாக மேற்கொள்ளவும், நிதி மூலாதாரங்கள் குறித்த விபரங்களை வௌிப்படைத்தன்மையுடன் பேணிக் கொள்ளவும் பாதுகாப்பு அமைச்சுக்கு உறுதிமொழி அளித்துள்ளன.
சிலோன் தவ்ஹீத் ஜமாத் - CTJ
அகில இலங்கை தவ்ஹீத் ஜமாத் - ACTJ
ஐக்கிய தவ்ஹீத் ஜமாத் - UTJ
ஶ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாத் - SLTJ
ஜமாஅத் அன்சார் சுன்னதில் முஹம்த்திய்யா - JASM
ஆகிய அமைப்புகளின் தடையே நீக்கப்படவுள்ளதாக குறித்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sundaytimes News: