வீடொன்றிற்குள் பலவந்தமாக பிரவேசித்து அங்கிருந்த பெண் ஒருவரை பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்திய காவல்துறை உத்தியோகத்தர் ஒருவரை எதிர்வரும் 03 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கேகாலை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ரம்புக்கனை காவல் நிலைத்தில் கடமையாற்றும் குறித்த உத்தியோகத்தர் நடமாடும் பாதுகாப்பு சேவையில் ஈடுபட்டிருந்த வேளையில் பெண் ஒருவரை பலவந்தமாக பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்தியுள்ளார்.
இந்த நிலையில் வீட்டின் உரிமையாளர் குறித்த காவல் துறை உத்தியோகத்தரின் கைகள் மற்றும் கால்களை அங்கிருந்த பாதுகாப்பு வேலியுடன் கட்டி வைத்ததுடன் காவல் துறையினருக்கு அறிவித்துள்ளார்.
இதற்கமைவாகவே காவல் துறை உத்தியோகத்தர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.