Our Feeds


Tuesday, July 25, 2023

Anonymous

கனடா தூதுவருடன் ட்விட்டரில் முட்டி மோதிய சரத் வீரசேகர - நடந்தது என்ன?

 



கறுப்பு ஜூலையை நினைவு கூர்ந்து கனடா தூதுவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவிற்கு பாராளுமன்ற உறுப்பினர் சரத்வீரசேகர போர்க்கொடி தூக்கியுள்ளார்.


இலங்கையில் 1983 இல் கொல்லப்பட்ட தமிழர்களை நினைவு கூர்ந்து கனடா தூதுவர் டுவிட்டர் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.

இதற்கு பதில் கொடுத்துள்ள சரத்வீரசேகர,

1983ம் ஆண்டு ஜூலையின் பின்னர் தமிழ் கும்பல்களால் வடக்கிலிருந்து துரத்தப்பட்ட ஆயிரத்திற்கும் அதிகமான சிங்களவர்கள் தமிழர்களை நாங்கள் நினைவுகூறுகின்றோம்.

கிழக்கு மாகாணத்தில் சிங்கள கர்ப்பிணித் தாய்மார்கள் கொல்லப்பட்டதையோ அநுராதபுரத்தில் 200 யாத்திரீர்கள் கொல்லப்பட்டதையோ அரந்தலாவையில் இளம் பிக்குகள் கொல்லப்பட்டதையோ ஆயுதமேந்தாத சரணடைந்த 600 பொலிஸார் தமிழ் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டதையோ கனடா தூதுவர் கண்டித்ததாக நாங்கள் கேள்விப்படவில்லை.

படுகொலைகளை தெரிவு செய்து கண்டிப்பது அந்த நபரின் நாகரீக இயல்புகளை கேள்விக்குட்படுத்துவதுடன் அவர்களின் இரகசிய நிகழ்ச்சி நிரல்களை அம்பலப்படுத்துகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »