பேராதனை வைத்தியசாலையில், 21 வயது யுவதியின்
உயிரிழப்பிற்கு காரணமான மருந்தினால் மேலும் சிலர் பாதிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து அந்த மருந்தினை பயன்படுத்துவதை இடைநிறுத்திவைத்துள்ளதாக சுகாதார அமைச்சின் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
பேராதனை வைத்தியசாலையில், செப்டிரியாக்சோன் என்ற மருந்தின் இன்னுமொரு தொகுதியினை பயன்படுத்தியவேளை இருவர் ஒவ்வாமையினால் பாதிக்கப்பட்டனர் என சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் சமன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
பத்துதொகுதி செப்டிரியாக்சோன் மருந்துகள் உள்ளன 21 வயது யுவதி ஒரு தொகுதி மருந்தினால் உயிரிழந்தார் வேறு இருவர் மற்றுமொரு தொகுதி மருந்தினால் பாதிக்கப்பட்டுள்ளார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து கண்டி வைத்தியசாலையில் அந்த தொகுதிமருந்தினை பயன்படுத்துவதை இடைநிறுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.