இலங்கை - பாகிஸ்தானுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் சர்ஃபராஸ் அஹமடுக்கு பதிலாக மொஹமட் ரிஸ்வான் களமிறங்கவுள்ளார் என PCB உறுதிப்படுத்தியுள்ளது.
இலங்கை அணியுடனான இரணடாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் போட்டி அஷித பெர்னாண்டோ வீசிய பந்து சர்ஃபராஸ் அஹமட்டின் தலையின் பின் பகுதியை தாக்கியது.
தொடர்ந்தும் துடுப்பெடுத்தாடிய அவர் 22 பந்துகளுக்கு 14 ஓட்டங்களை பெற்றிருந்த வேளையில் அவர் உடல் நிலை மோசமானது. அவரைப் பரிசோதிப்பதற்காக பிசியோ சர்ஃபராஸுடன் நீண்ட நேரம் உரையாடினார்.அதன் பின்னர் அவர் மைதானத்திலிருந்து வெளியேறியுள்ளார்.
இந்நிலையில் போட்டியின் ஏனைய நாட்களில் அவர் ஓய்வில் இருப்பார் என்பதை பாகிஸ்தான் கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.