Our Feeds


Thursday, July 20, 2023

Anonymous

ரனிலிடம் கேள்வியெழுப்புங்கள் - இந்தியப் பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் கடிதம்

 



இலங்கையிலுள்ள தமிழ் மக்களின் அபிலாசைகள் மற்றும் கச்சத்தீவு மீட்பு ஆகிய இரண்டு விடயங்கள் குறித்து இலங்கையின் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கேள்வி எழுப்ப வேண்டும் என தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.


தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இந்திய பிரதமர் நரேந்திரமோடிக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்திலேயே இந்த கேள்வியை எழுப்பியுள்ளார்.

அத்துடன், இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் இந்திய விஜயத்தின் போது அவரை சந்திப்பதற்கு வியூகமளிக்குமாறும் திராவிட முன்னேற்றக்கழகத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெளியுறவுத்துறை அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 21ஆம் திகதி அவர் தனது தற்போதைய பொறுப்புகளை ஏற்றுக்கொண்டதன் பின்னர் அவர் மேற்கொள்ளும் முதல் இந்திய விஜயம் இதுவாகும்.

1974 ஆம் ஆண்டில் தமிழக அரசாங்கத்தின் அனுமதியின்றி கச்சத்தீவு இலங்கைக்கு வழங்கப்பட்ட வரலாற்றை, ஸ்டாலின் தமது கடிதத்தில் நினைவு கூர்ந்துள்ளார்.

இந்திய கடற்றொழிலாளர்கள், பாரம்பரிய மீன்பிடித் தளங்களுக்கு மிகவும் தடைசெய்யப்பட்ட அணுகலை எதிர்கொள்கின்றனர்.

இலங்கை கடற்படையினரால் அதிகரித்த துன்புறுத்தல்கள் மற்றும் அத்துமீறல் குற்றச்சாட்டின் கீழ் இலங்கை கடற்படையினரால் அவர்கள் கைது செய்யப்படுகின்றனர்.

1956 ஆம் ஆண்டு முதல் இலங்கையில் உள்ள தமிழர்களின் உரிமைகள் மற்றும் அபிலாசைகளை நிலைநிறுத்த தமிழக அரசும், திராவிட முன்னேற்றக்கழகமும் முன்வைத்த கோரிக்கைகளை தமது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ள ஸ்டாலின், தமிழர்களின் சமூக, அரசியல், கலாசார மற்றும் பொருளாதார உரிமைகளைப் பாதுகாப்பது இன்றியமையாதது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதன் மூலமே இலங்கையில் சமமான குடிமக்களாக அவர்கள் கண்ணியமான வாழ்க்கையை நடத்த முடியும்.

இந்த நோக்கத்திற்காக, தீவு தேசத்தில் உள்ள தமிழர்களின் உண்மையான மற்றும் தீர்க்கப்படாத அபிலாசைகளை நிறைவேற்றும் மாகாணங்களுக்கு போதுமான மற்றும் அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வு மேற்கொள்ளப்படவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »