யாழ்.அச்சுவேலி பொலிஸ் நிலையத்திற்கு அருகில் உள்ள காணியில் தற்கொலைக்கு முயன்ற நபரை பொலிஸார் காப்பாற்றியுள்ளனர்.
தன் மகள் தொடர்பில் அயல் வீட்டார் இழிவாக பேசியது தொடர்பாக பொலிஸார் நடவடிக்கை எடுக்க தவறிவிட்டதாக தெரிவித்து அச்சுவேலி பொலிஸ் நிலையத்திற்கு அருகில் உள்ள காணியில் குறித்த நபர் தற்கொலை செய்ய முயற்சித்துள்ளதாக தெரியவருகிறது.
இதன்போது விரைந்து செயற்பட்ட பொலிஸார் குறித்த நபரை மடக்கிப்பிடித்து தற்கொலை முயற்சியில் இருந்து காப்பாற்றியுள்ளனர்.
ஆவரங்கால் – சர்வோதயா பகுதியை சேர்ந்த நபரே இவ்வாறு காப்பாற்றப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் காரணமாக அச்சுவேலி பொலிஸ் நிலையத்திற்கு அருகில் பரபரப்பான நிலையேற்பட்டது.