சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனம் (FIFA) மற்றும் ஆசிய கால்பந்தாட்ட கூட்டமைப்பு (AFC) ஆகியவை கடுமையான நிபந்தனை அடிப்படையில் 2026 பிபா உலக கிண்ண தகுதிச் சுற்றுக்கான உத்தியோகபூர்வ போட்டியில் இலங்கையை சேர்க்க முடிவு செய்துள்ளன.
கடந்த ஜனவரி 21 ஆம் திகதி முதல் பிபா, இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தை இடை நிறுத்தியது.
இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனம் தகுதிச் சுற்றுகளின் தொடக்க போட்டியில் குறைந்தபட்சம் 10 நாட்களுக்கு முன்னதாக தேர்தலை நடத்த வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் இலங்கையை உலகக் கிண்ண தகுதிச் சுற்று போட்டியில் சேர்க்க FIFA மற்றும் AFC ஒப்புக்கொண்டன.
நிபந்தனைகள் நிறைவேற்றப்படா விட்டால் இலங்கை அணி தகுதிச் சுற்று போட்டிகளில் விளையாட முடியாது.