தேவையான குறைந்தபட்ச எரிபொருள் இருப்புக்களை முறையாக பேணுவதற்கு தேவையான கட்டளைகளை வழங்குமாறு அனைத்து எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்களையும் அமைச்சர் காஞ்சன விஜேசேகர கேட்டுக்கொள்கிறார்.
இதேவேளை, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திடம் போதியளவு எரிபொருள் இருப்பு உள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அதேநேரம் நாடளாவிய ரீதியாக செயற்படும் ஒக்டேன் 92ரக பெற்றோலை விநியோகிக்கும் 101 எரிபொருள் நிலையங்கள் 50 சதவீதமான கையிருப்பினை கொண்டிருக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் ஒட்டோ டீசலை விநியோகிக்கும் 61 விநியோகஸ்த்தர்களும் 50 சதவீதமான கையிருப்பை கொண்டிருக்கவில்லை எனவும் அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
30.07.2023 காலை 8.30 மணி நிலவரப்படி, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திடம் உள்ள எரிபொருள் இருப்பு பின்வருமாறு.
Diesel – 124,690
Sup. Diesel – 5,651
92 Pet – 19,903
95 Pet – 4,537
JET A1 – 26,539