லங்கா சதொசவின் 400 கிராம் பால் மா பக்கட் ஒன்றின் விலை 31 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் 400 கிராம் பால் மா பக்கட்டின் புதிய விலை 999 ரூபாவாக அறிவிக்கப்பட்டுள்ளதாக லங்கா சதொசவின் தலைவர் பசந்த யாப்பா குறிப்பிட்டுள்ளார்.
இவ்விலைக்குறைப்பானது நாளை(21) முதல் அமுல்படுத்தப்படுமென நிறுவனத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.