ஈராக்கின் பக்தாத்தில் உள்ள ஸ்வீடன் தூதரகத்தை இன்று (20) காலை ஆர்ப்பாட்டக்காரர்கள் குழுவொன்று முற்றுகையிட்டு தீ வைத்ததாக ரொய்ட்டர் செய்தி வெளியிட்டுள்ளது.
ஸ்வீடனில் குர்ஆன் எரிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அவர்கள் இவ்வாறு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக ஸ்வீடன் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிகாரிகள் பாதுகாப்பாக உள்ளனர்.
சமீபத்தில், ஸ்வீடனில் குர்ஆன் எரிக்கப்பட்டது, வரும் வாரங்களில் இதுபோன்ற ஒன்று திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதற்கு எதிராக ஈராக்கில் போராட்டங்கள் நடத்தப்பட்டன.
நாட்டின் சக்திவாய்ந்த ஷியா மதகுருவான முக்தாதா சதர் இந்த போராட்டங்களுக்கு அழைப்பு விடுத்தமையும் குறிப்பிடத்தக்கது.