எதிர்வரும் ஒகஸ்ட் மாத முற்பகுதியில் இருந்து நீர் கட்டணம் அதிகரிக்கப்பட உள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் பொதுமுகாமையாளர் வசந்தா இலங்கசிங்ஹ தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
குறித்த யோசனை அமைச்சரவையின் அனுமதிக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டால் ஓகஸ்ட் மாத முற்பகுதியில் இருந்து நீர் கட்டணம் அதிகரிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.