மனிதர்களுக்கு வயதாவதை தடுக்கும் வேதிக்
கலவையை கண்டுபிடித்துள்ளதாக அமெரிக்காவின் ஹார்வர்ட் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.இது குறித்து ஹார்வர்ட் விஞ்ஞானி டேவிட் ஷின்கிளயர் தன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கையில்,
மரபணு சிகிச்சை மூலம் வயதைக் குறைக்க முடியும் என்பதை எங்களது முந்தைய ஆய்வில் நிரூபித்தோம். வேதிக் கலவை மூலமும் வயதைக் குறைக்க முடியும் என்பதை இப்போது நிரூபித்துள்ளோம்.
கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாக இது தொடர்பாக எங்கள் குழு தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டு வந்தது. அந்த ஆராய்ச்சியின் விளைவாக வயதைக் குறைக்கும் மூலக் கூறுகளைக்கண்டுபிடித்துள்ளோம்.
குறைந்தவிலையில் மனித செல்களுக்குபுத்துணர் வூட்டுவதற்கான ஒரு முன்நகர்வு இது என பதிவிட்டுள்ளார்.
முதற்கட்டமாக இந்த வேதிக்கலவை எலி மற்றும் குரங்குகளுக்கு செலுத்தி பரிசோதிக்கப் பட்டுள்ளது. பரிசோதனையின் முடிவில், மூளைத் திசுக்கள், கிட்னி, பார்வை ஆகியவற்றில் மேம்பாடு ஏற்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.