ஏவுகணைகளை தயாரிப்பதில் அமெரிக்காவின் உதவியை எதிர்பார்ப்பதாக அவுஸ்திரேலிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ரிச்சர்ட் மார்லஸ் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா-அவுஸ்திரேலியா இடையே வருடாந்த அமைச்சர்களின் சந்திப்பு அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் இடம்பெற்றது.
இதில் அமெரிக்கா சார்பில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஆன்டனி பிளிங்கன், பாதுகாப்புத்துறை அமைச்சர் லாயிட் ஆஸ்டின் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் ஏவுகணைகளை தயாரிப்பதில் அமெரிக்காவின் உதவியை எதிர்பார்ப்பதாக அவுஸ்திரேலிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ரிச்சர்ட் மார்லஸ் தெரிவித்துள்ளார்.
அப்போது, இரு நாடுகளுக்கும் இடையே உள்ள கூட்டு தொழில்துறை தளத்தின் ஒரு பகுதியாக 2025 ஆம் ஆண்டுக்குள் அவுஸ்திரேலியாவில் ஏவுகணைகளின் உற்பத்தி தொடங்க தேவையான உதவிகளை செய்ய தயாராக உள்ளதாக அமெரிக்க பிரதிநிதிகள் தெரிவித்தனர்.