களுத்துறை போதனா வைத்தியசாலையில் சிசேரியன் அறுவை சிகிச்சைக்கு தேவையான மயக்க மருந்து கிடைக்காததால் சத்திரசிகிச்சைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் இன்று (20) அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் பத்து இலட்சம் தாய்மார்களும் சிசுக்களும் போசாக்கின்மையால் பாதிக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில் தாய்மார்கள் மற்றும் பிள்ளைகளின் உயிர்கள் பாதிக்கப்படலாம் எனவும் களுத்துறை வைத்தியசாலையில் சிசேரியன் செய்வதற்கு தேவையான வசதிகளை செய்து கொடுப்பது மிகவும் அவசியமானது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.