Our Feeds


Monday, July 17, 2023

SHAHNI RAMEES

90,000 பாவனையாளர்களுக்கு நீர் துண்டிப்பு

 



நீர்கட்டணம் செலுத்தத் தவறிய 90,000 பாவனையாளர்களுக்கு

நீர்துண்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச்சபை தெரிவித்துள்ளது.




இந்த வருடம் மே மாத நிலவரப்படி சுமார் 8 பில்லியன் ரூபாய் நீர் கட்டணங்கள் நிலுவையில் உள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.




மேலும், மொத்த நீர் கட்டண தொகையில் 7.1 பில்லியன் ரூபாய் நிலுவை, வீட்டு நீர் விநியோக பாவனையாளர்களால் செலுத்தப்படாமல் உள்ளது.




மத வழிபாட்டுத் தலங்களில் 32 மில்லியன் ரூபாவும், பொது நீர் விநியோகத்தில் 262 மில்லியன் ரூபாவும், தொழிற்சாலைகளில் 15 மில்லியன் ரூபாவும் மற்றும் அரச நிறுவனங்களில் 656 மில்லியன் ரூபாவும் செலுத்தப்படாமல் நிலுவையில் உள்ளதாக தெரிவித்துள்ளது.




நிதி நெருக்கடிகளுக்கு பதிலளிக்கும் வகையில், தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை 90,617 பாவனையாளர்களின் நீர் விநியோகத்தை துண்டித்துள்ளது. 




5,277 நுகர்வோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »