Our Feeds


Saturday, July 22, 2023

Anonymous

மூன்று வருடங்களில் 7 ஆயிரம் பேர் உயிரிழப்பு - நடந்தது என்ன?

 



பொலிஸ் தலைமையகத்தின் அறிக்கையின் படி, கடந்த மூன்று வருடங்களில் (2020, 2021 மற்றும் 2022) நாடு முழுவதும் வீதி விபத்துக்களில் ஏழாயிரத்து நூற்று எழுபத்தி இரண்டு பேர் (7172) உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


அந்த வகையில் குறித்த மூன்று ஆண்டுகளில் 67,687 வீதி விபத்துகள் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்ப்பட்டுள்ளது.


கடந்த 2022-ம் ஆண்டு வீதி விபத்துக்களில் 2515 பேரும், 2021ல் 2513 பேரும், 2020ல் 2144 பேரும் உயிரிழந்துள்ளனர்.


பொலிஸ் தலைமையகத்தின் சமீபத்திய வருடாந்த அறிக்கையின்படி, 2020 ஆம் ஆண்டில் 2040 அபாயகரமான வீதி விபத்துகளும், 2021 ஆம் ஆண்டில் 2414 அபாயகரமான வீதி விபத்துகளும், 2022 ஆம் ஆண்டில் 2395 ஆபத்தான வீதி விபத்துகளும் இடம்பெற்றுள்ளன.


வீதி விபத்துக்கள் குறைவடைந்துள்ள போதிலும், விபத்துக்களினால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »