கொழும்பு மாவட்டத்தில் குறைந்த வருமானம் பெறுவோர் மற்றும் பாதிக்கப்படக்கூடிய குடியிருப்புகளில் வசிப்பவர்களுக்காக 6 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு வருவதாகவும், அந்த அடுக்குமாடி குடியிருப்புகளில் 4,000க்கும் மேற்பட்ட வீடுகள் இருப்பதாகவும் நகர அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
கொழும்புகே மாவத்தை, ஸ்டேடியம் தோட்டம், அப்பல்வத்தை, பெர்குசன் வீதி, ஒபேசேகரபுர மற்றும் மாதம்பிட்டிய ஆகிய பிரதேசங்களில் இந்த வீட்டுத் தொகுதிகளை நிர்மாணித்து வரும் நகர அபிவிருத்தி அதிகார சபை, ஒரு வீடமைப்பு 550 சதுர அடி எனவும் குறிப்பிட்டுள்ளது.
ஆசிய உட்கட்டமைப்பு அபிவிருத்தி வங்கியின் அனுசரணையில் இந்த வீடமைப்புத் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக அதிகாரசபை மேலும் தெரிவித்துள்ளது.