சவுதி அரேபியாவின் அல் – ஹிலால் கால்பந்து விளையாட்டுக் கழகம் உலகின் அதி சிறந்த வீரரான மெஸ்ஸியை தன்னுடைய கழகத்துக்கு வாங்க கடந்த சில வாரங்களாக முயற்சிகளை மேற்கொண்டாலும் அந்த முயற்சி தோல்வியில் முடிந்தது. மெஸ்ஸி அமெரிக்காவின் மியாமி கழகத்தில் சேர்ந்தார்.
இந்நிலையில்தான் அல் ஹிலால் கழகம் உலகின் மற்றுமொரு தலைசிறந்த இளம் வீரரான க்ளையன் எம்பாப்பேவை 300 மில்லியன் டொலர்களுக்கு வாங்க தனது ஏலத்தை அறிவித்துள்ளது. உலகிலேயே ஒரு வீரர் விலை போகும் அதிக தொகை இது என கூறப்படுகின்றது.
அண்மைக்காலமாக சவுதி அரேபியாவின் பல விளையாட்டு கழகங்கள் உலகின் தலைசிறந்த கால்பந்து வீரர்களை தங்களுடைய அணிகளுக்காக வாங்கி வருகின்றது. அந்த பட்டியலில் அண்மையில் கிறிஸ்டியானோ ரொனால்டோ 200 மில்லியன் டொலர்களுக்கு அல் – நாசர் கழகத்தால் வாங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.